பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, வீரர்களுக்கு உற்சாகம் பீறிட்டுக் கிளம்பிவிடும். போட்டியிடுவதற்கென்று சில விதி முறைகள் உண்டு என்றாலும், தங்கள் திறமையைக் காட்டி, பெண்களிடம் புகழ் பெற வேண்டும் என்ற வேகத்தில், வெறியில், எதிர்த்து வருபவர்களைக் காயப்படுத்திவிடுவதும் உண்டு. சில சமயங்களில் கொலையும் நடக்கும்.

இரத்தக் களரி ஏற்படுவது போல குதிரை மீது அமர்ந்து கொண்டு போட்டியிட்ட விளையாட்டு முறை, இடை இருட்காலத்தின் பிற்பகுதியில் சற்று நாகரிகமான விளையாட்டாக மாறி வந்தது. அதாவது வண்மை இடம் பெறக் கூடாது இந்தப் போட்டியில் என்ற விதிமுறை ஒன்று உருவாக்கப்பட்டது.

அதாவது, கவசம் அணிந்தவாறு குதிரை மீதேறியிருந்து, கையில் முனை மழுங்கிய ஆயுதங்கள் அல்லது நீண்ட கம்புகளை வைத்துக் கொண்டு, எதிரியை குதிரையிலிருந்து கீழே விழச்செய்வது போல திறமையைக் காட்டுவது என்ற கொள்கையை விரிவாகக் கொண்டு வந்தனர்.

இந்த முறையைத்தான் திரும்பு, திருப்பு அல்லது மாற்று என்ற பொருளில் கொண்டிருக்கின்றனர். குதிரை வீரனை இருக்கும் இடத்திலிருந்து மாற்றிக் கீழே விழச் செய்தல் என்னும் பொருளில் இந்த டோர்னமென்ட் என்ற சொல்லைக் கொண்டு வந்திருக்கின்றனர்.

அதாவது, இரண்டு முனையிலிருந்தும் ஒருவரை நோக்கி ஒருவர் தமது குதிரையை விரட்டிக் கொண்டு