பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38




16. NET

வலை என்று தமிழில் இதற்குப் பொருள் கூறி அழைக்கிறோம்.

பந்து விளையாட்டுக்களில் மிகமுக்கியமான இடத்தைப் பெற்றிருப்பது வலையாகும்.

கைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், வளையப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம், டென்னிஸ் போன்ற ஆட்டங்களில் உள்ள வலையைப் பார்க்கும் பொழுது, நீள அகலத்தில் வேற்றுமை இருந்தாலும், அமைப்பில் ஓர் ஒற்றுமையைப் பார்க்கலாம்.

அதாவது, வலையின் மத்தியில் சிறுசிறு இடைவெளி இருப்பது போல பின்னப்பட்டிருக்கும் அமைப்பே அது.

அதனைப் பார்த்தவுடன் உங்கள் நினைவுக்கு உடனே வருவது மீன் பிடிக்கும் வலையாகும்.

அப்படி வந்தால் அது தவறல்ல. அது உண்மையான நினைவேயாகும்.

ஏனெனில் , மீன் பிடிக்கும் வலைதான், பந்தாட்டத்தின் வலை வருவதற்கு முன்னோடியாக அமைந்து விட்டிருக்கிறது.

அந்த அமைப்பே இன்றும் நிலைத்துப் போயிருக்கிறது.

Net என்ற ஆங்கிலச் சொல், Nassa என்னும் இலத்தின் மொழியிலிருந்து வந்த சொல்லாகும்.