பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும் 40


வேண்டும் என்று காட்சியாக்கிடவே அதனை அவர்கள் ஆடையிட்டு மறைக்காமல், அழகைக் காட்டிக் கொண்டு நிர்வாணமாகப் பயிற்சி செய்தார்கள்.

அவ்வாறு நிர்வாணமாகப் பயிற்சி செய்யும் இடத்தையே Gymnasium என்றும் அழைத்தனர். அறிவை வளர்க்கும் இடமான மூன்று இடங்களை அந்நாளில் கிரேக்கர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றனர்.

பிளேட்டோ போன்ற தத்துவஞானியர் தங்கி ஆராய்ச்சி அறிவுடன் பேசி மகிழ்ந்த இடம் அகாடமி (Academy) என்றும்; தத்துவ மேதை அரிஸ்டாட்டில் கலந்துரையாடிய இடம் லிசியம் (Lyceum) என்றும்; ஆண்டிஸ்தெனிஸ் எனும் அறிஞர் இருந்து உறவாடிய இடம் கினோசார்ஜி (Kynosarge) என்றும் அழைக்கப்பட்டன.

அதைப் போலவே, உடலைப் பற்றி அதிகமான அறிவு பெறவும். வலிவும் வனப்பும் பெறவும், முழு மனிதனாகும் தகுதியைப் பெறுகின்ற இடமாகவும் ஜிம்னேசியம் பயன்பட்டு வந்தது.

பழங்கால கிரேக்கத்தில் தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் உடலினை பயிற்சி மிக்கதான, பொலிவு மிகுந்ததான தன்மையில் உருவாக்குகின்ற வெளிப்புற இடமாக (Out Door Place) ஆரம்ப நாட்களில் இருந்து வந்தது. ஒட்டம், தாண்டல், ஒடுதல், மல்யுத்தம் செய்தல், குத்துச் சண்டை போடுதல், எடை தூக்குதல்,