பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


நடனமாடுதல், விளையாடுதல் போன்ற பல திறப்பட்ட செயல்களும் நடைபெற்றன.

ஆனால், காலம் மாற மாற, ஜிம்னேசியம் என்ற சொல், நான்கு சுவர்களுக்குள் உருவான பயிற்சி இடத்தைக் குறிப்பதாக வந்துவிட்டது.

பொதுவாக, கூடைப் பந்தாட்டம் ஆடுவதற்கென்று, உள்ளாடும் அரங்கங்கள் தோன்றின. அதில் அதிகமான இடவசதி அமைந்திருந்ததால் குத்துச் சண்டை, மல்யுத்தம் கூடைப் பந்தாட்டம் போன்ற பல ஆட்டங்கள் நடைபெற விளையாட்டாளர்கள் வழிவகுத்தனர்.

அதுவே இந்நாளில் உள்ளாடும் அரங்கமாக மாறி நல்ல இடம் பெற்றுக்கொண்டது.



18. INTRAMURAL

உள்ளிடைப் போட்டி என்று நாம் இதனை தமிழ்ப்படுத்திக் கூறுகின்றோம்.

ஒரு பள்ளியிலோ அல்லது ஒரு குழுவிலோ இருப்பவர்களுக்கிடையே நடைபெறுகின்ற போட்டிகள் என்பதால், உள் இடைப் போட்டி என்னும் பொருளில் கூறியிருக்கிறோம்.

Intramural என்ற இலத்தின் சொல்லும் இந்தப் பொருளில்தான் வந்திருக்கிறது.

Intra எனும் சொல்லுக்கு உள்ளுக்குள்ளே (Within) என்றும், Mural எனும் சொல்லுக்கு சுவர் என்றும்