பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


மையத்தில் காட்சிகளும், காட்சி நடை பெறுகின்ற வட்ட மேடையைச் சுற்றிப் பார்வையாளர்களும் உட்கார்ந்து பார்க்கின்ற அமைப்புள்ள பெரிய மாளிகையையே சர்க்கஸ் மேக்சிமஸ் என்றனர். சிறிய வட்டம் என்பதை சர்க்குலஸ் என்றனர். அதிக அளவுள்ள பெரிய வட்டத்தை (Maximum) சர்க்குலஸ் என்பதற்குப் பதில், சற்று சுருக்கிச் செல்லமாக, சர்க்கஸ் என்று அழைத்திருக்கின்றார்கள்.

தேரோட்டப் போட்டிகள், ஒட்டப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற உள்ளாடும் விளையாட்டரங்கத்திற்கு (Gymnasium) அந்நாளில் சர்க்கஸ் மேக்சிமஸ் என்று பெயர் இருந்தது. பின்னாளில், மேக்சிமஸ் மறைந்து சர்க்கஸ் என்றே அழைக்கப்பட்டு வந்தது.

காலத்தின் கோலமோ என்னவோ, வாசனை என்று அழைக்கப்படுகின்ற நாற்றம் என்ற சொல்லானது, கெட்ட வாசனை என்பதைக் குறிக்கும் சொல்லாக மாறிப்போய்விட்டது போல, தேரோட்டப் போட்டிகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்ற இடமாக விளங்கிய இடமும், அதைச் சுட்டுகின்ற பெயரும் மகிழ்ச்சியையும் பிரமையையும் ஊட்டுகின்ற சாகச வித்தைகளான சர்க்கஸ் காட்சிக்குப் போய்விட்டது.

கொஞ்சம் கற்பனையில் பாருங்கள். மத்தியில் வட்டமான பரப்பளவு, அதில் காட்சிகள் நடைபெறுகின்றன. அந்த மேடையைச் சுற்றிப் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கின்றனர். இதே