பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


அமைப்புதான் சர்க்கஸ் மேக்சிமஸ் ஸிலும் இருந்தது போலும்.

பெயர் நீளத்தில் குறைந்து சர்க்கஸ் ஆயிற்று. அத்துடன் நில்லாமல் விளையாட்டரங்கத்திலிருந்தும் விடை பெற்றுக் கொண்டது. அதுவே சர்க்கஸ் என்று பெயர் பெற்று மகிழ்ச்சியும் பரப்பரப்பும் ஊட்டுகின்ற மேடையாகவும் மாறிக் கொண்டுவிட்டது.

23. CONTEST


நம் நாட்டில் அடிக்கடி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு தொகுதியில் பலர் போட்டியிடுகின்ற பொழுது, அதனைக் குறிப்பதற்காக Contest என்ற வார்த்தையை அடிக்கடிப் பயன்படுத்துவதை நாம் கேட்டிருக்கிறோம்.

Contest எனும் சொல்லுக்குப் பொருள் தருகின்ற தமிழகராதி கூட சச்சரவு செய், போட்டியிடு என்றுதான் அர்த்தம் தருகிறது. ஆனால், இந்த Contest என்ற சொல் ஆரம்ப நாட்களில் தோன்றியதன் அர்த்தமே வேறுவிதத்தில் அல்லவா இருக்கிறது!

Contest என்று சொல்லப்படுகின்ற ஆங்கிலச் சொல்லானது, Contestari என்ற இலத்தின் சொல்லி லிருந்துதான் பிறந்திருக்கிறது.

இந்த இலத்தின் சொல்லுக்கு சாட்சிகளை அழை (To call witness) என்பது பொருளாகும். சாட்சிகளை அழை என்பதற்கும், சண்டையிடு, போட்டியிடு என்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?