பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


இந்த Contestari என்ற வார்த்தையை நாம் இன்னும் பிரித்துப் பார்த்தோமானால், ஆழமாக அர்த்தம் காணமுடிகிறது. Con testari என்றால், சாட்சியாக இரு என்பதாகவும் பொருள் கொள்கின்றார்கள் ஆராய்ச்சி வல்லுநர்கள்.

அதாவது இரண்டு குழுக்கள் போட்டியிடுகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களுக்கிடையில் சச்சரவு அல்லது தவறு ஏதாவது நடந்து அவர்களுக்குச் சாட்சியாக நாம் போனால் அதைத்தான் Contest என்று கூறியிருக்கின்றார்கள்.

ஆனால், இதற்குரிய அர்த்தம் வேறு விதமாக அல்லவா இருக்கிறது! போட்டியிடுகின்ற நேரத்தில் சாட்சியாக இருந்த நிலையைக் குறிக்கும் சொல்லானது, சாட்சி தேவையில்லை என்று நினைத்துக் கொண்டு, சாட்சியாளர்களிடம் அலுப்பு ஏற்பட்டதன் காரணமாக சாட்சியே வேண்டாம். சண்டையிடுபவர்களே போதும் என்பதாக மாற்றிக் கொண்டார்களோ, அல்லது மாறிவிட்டதோ என்னவோ!

இப்பொழுதெல்லாம் Contest என்றால் போட்டியிடு என்பதாகவே குறிக்கப்படுகிறது.



24. SERVE


Serve என்ற சொல்லை பொதுவாக உச்சரித்தவுடனே, நமது நினைவுக்கு வருவது விருந்தும் வேலையாட்களும் தான், பரிமாறும் செயலைக் குறிக்கின்ற சொல்லானது, விளையாட்டுக்களில்