பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

அதிலும், ஆட்டம் முழுவதும் அந்த சொல்லே பரிபூரணமாக நீக்கமற நிறைந்தும் விளங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சொல்லானது, ஆட்டத்தைத் தொடங்கி வைக்கும் முதல் நிலையிலேயே தொடங்கி, ஆட்டம் முடியும் வரைக்கும் தொடர்ந்து பலராலும் உச்சரிக்கப்படுகின்ற பெருமைக்குரிய ஸ்தானத்திலே விளங்கி வருகிறது என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்.

டென்னிஸ் ஆட்டம் , மேசைப் பந்தாட்டம் , கைப் பந்தாட்டம் , வளையப் பந்தாட்டம் , பூப்பந்தாட்டம், இறகுப் பந்தாட்டம் போன்ற எல்லா ஆட்டங்களிலும் Serve, Service என்ற சொற்கள் அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அப்படியென்றால், உணவினை பரிமாறிப் படைக்கின்ற நிலைக்குரிய சொல்லானது, எப்படி விளையாட்டுத்துறைக்குள் புகுந்து கொண்டு விளையாடி வருகிறது என்பதை இங்கே நாம் விரிவாகக் காண்போம்.

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் புதிய விளையாட்டுக்கள் சில தோன்றும் பொழுது, மக்களுடன் தொடர்பு கொண்டிருந்த பழைய விளையாட்டுக்கள் கொஞ்சங் கொஞ்சமாக மங்கி, பிறகு மறைந்து போவதாகவே இருந்திருக்கின்றன. இது வரலாறு காட்டும் உண்மையாகும்.