பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும் என்ற தலைப்பில் வெளிவரும் இந்நூல், இதுவரை தமிழிலக்கியத்தில், வெளிவராத முதல் நூல், அரிய நூல் என்பது என் எண்ணம்.

விளையாட்டுத் துறையில் வல்லுநர்கள் மட்டு மன்றி, விளையாடும் வீரர்களும் வீராங்கனைகளும், கற்ற பார்வையாளர்களும், மற்றும் கல்லாத ரசிகர்களும் கூட மிக சர்வ சாதாரணமாக ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பதை நாம் கேட்டிருக்கிறோம்.

விளையாட்டு பற்றிய சொற்கள் தான் அவைகள் என்றாலும், அடிக்கடி அவர்கள், அவர்களை அறியாமலேயே மிக இயல்பாகவும் எளிதாகவும் பேசுவதைப் பார்க்கும் பொழுது, எவ்வளவு அழுத்தமாக அந்த சொற்கள் அவர்கள் இதயத்திலே பதிந்து போயிருக்கின்றன என்கிற உண்மையையும் புரிந்து கொள்ள முடிகிறது.

விளையாட்டுத்துறையில் சிறு வயது முதற் கொண்டே மிக ஈடுபாடுடைய நான், விளையாட்டுக்கள் நடக்கும் பொழுது இவ்வாறு மற்றவர்கள் பேசிக் கொள்வதை மிகவும் உன்னிப்பாகவும், உற்சாகமாகவும் கவனித்து வந்திருக்கிறேன்.

அவ்வாறு அந்தச் சொற்களை தவறுதலாகவும், சில சமயங்களில் அர்த்தம் புரியாமலேயே அடித்துப் பேசப்படும் பொழுதும், அந்த சொற்களுக்குரிய உண்மையான பொருள் என்னவென்று புரியாமல் குழம்பிப் போயும் இருக்கிறேன்.

பல விளையாட்டுக்கள் பற்றிய நூல்கள் எழுதுவதற்காக நான் பல்வேறு துறை நூல்களை படிக்கும் வாய்ப்பினை பெற்ற பொழுது, எனக்கு பொருள் விளங்காமல் இருந்த சொற்களை ஆங்காங்கே கண்டு, கற்றுத் தெளிவு பெற்றேன்.

இது போன்ற பல சொற்களைத் தேடிக் கண்டு பிடிக்கும் ஆர்வம் வந்து சேர்ந்து கொள்ளவே, அந்த முயற்சியிலும் அவ்வப்போது ஈடுபடலானேன்.

ஏறத்தாழ 35 சொற்களின் தோற்றத்தையும், அதன் ஆரம்ப கால அர்த்தத்தையும், எந்தெந்த மொழியிலிருந்து எழில் பெற்று வந்தன