பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


உடை உடுத்திக் கொள்வதிலிருந்து உணவு படைப்பதில் வரை, வேலைக்காரர்கள் உதவியினாலேயே வாழ்க்கை நடத்துபவர்கள் ஆயிற்றே கெளரவம் பார்ப்பவர்கள் அல்லவா!

வசதி வந்து விட்டால், அசதியும் வந்து விடும் என்பார்களே, அந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கையில், விளையாட்டுக்கு மட்டும் தனிப்பாதையையா மேற்கொள்வார்கள்!

பொழுது போக்குவதற்காகவும், பிறருடன் பேசி உறவாடுவதற்கும் அந்த சமயத்தில் உற்சாகமாக சிறிதளவு உடலுக்குப் பயிற்சி பெறுவதற்கும் என்ற நிலையில்தான், ஆர்வம் படைத்த பிரபுக் குடும்பத்தினர் விளையாடிட வந்தார்கள்.

டென்னிஸ் ஆட்டம் வந்து விட்டது. நடுவிலே வலைகட்டப்பட்டு இருக்க, இரு புறமும் நின்று கொண்டு பந்தை அடித்து ஆடவேண்டுமே கையில் பந்தாடும் மட்டையுடன் (Racket) ஆட வந்து விட்டபிறகும் கூட, அவர்களால் உடம்பை வளைத்து, கட்டுப்படுத்தி ஆட முடியவில்லை.

அதனால், அருகிலே தங்களுடைய வேலைக்காரர்களையும் கோட்டுக்கு வெளியே நிற்கவைத்துக் கொண்டு ஆடிடத் தொடங்கினார்கள். அதாவது, தாங்கள் பந்தை அடித்தாடத் தொடங்குவதற்கு முன்னால், வெளியே நின்று கொண்டிருக்கின்ற வேலைக்காரர் ஒருவரை நோக்கிப் பந்தை உள்ளே எறியுமாறு செய்வார்கள். பிறகு அந்தப் பந்தை அவர் வலைக்கு மறுபுறம் அடித்தாட