பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வீரம் நிறைந்த போட்டியில் அல்லது போர்க்களத்தில் எதிர்த்து நிற்பவர்களை விரட்டி அடித்தல், அல்லது விரட்டி அடித்து அதன் மூலமாக வெற்றி முகம் காண்கின்ற வாய்ப்பைப் பெறுதல் என்பது இதற்குரிய பொருளாக அமைந்திருக்கிறது.

போரில் பகைவர்களை எதிர்த்து, விரட்டி அடித்து வெற்றி பெறுவதற்கு உரிய குறிப்பினைத் தருவதற்காக ஒரு சொல்லா என்றால், அந்தச் சூழ்நிலையை உண்டுபண்ணியிருந்த காலக்கட்டத்தையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

கிரேக்கச் சொல்தான் Trope என்று கூறுகின்றார். பழங்காலக் கிரேக்க நாட்டினர் அடிக்கடி தமது பக்கத்து நாடுகளுக்கிடையே பகைமை பூண்டு போர் புரிந்த வண்ணமே தங்கள் காலத்தைக் கழித்திருக்கின்றார்கள். போக்கியிருக்கின்றார்கள் என்பதாக கிரேக்க வரலாறு கூறுகிறது.

உதாரணத்திற்கு, ஸ்பார்ட்டாவும் ஏதென்சும் அடிக்கடி போரிட்டுக் கொண்டிருந்த நாடுகளாகும். அத்தகைய சூழ்நிலைக்கு மக்களை, அந்தந்த நாடுகள் தயார் செய்து கொண்டிருந்தன. அதற்காகவே, உடற் பயிற்சிகளும், உள்ளாடும் அரங்கமும். விளையாட்டுக் களும், அதனைத் தழுவி, இராணுவப் பயிற்சிகளும் தொடர்ந்து நடந்தன.

இவ்வாறு கிரேக்க நாட்டு மக்கள் போர் முகம் காணும் பேராவலில் திளைத்து. தங்கள் ஆருயிரையும் தாயகத்திற்காக அர்ப்பணித்துவிடத் தயாராக வாழ்ந்த