பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

62


பொழுதுதான், இந்தச் சொல் உருவாகி இருக்கிறது போலும்.

பகைவர்களை எதிர்த்து விரட்டியடி, எனும் பொருளில் உருவான Trope என்ற சொல், காலப்போக்கில் Tropain என்று மாறி வந்திருக்கிறது.
இந்த Tropain என்ற வார்த்தைக்கு, எதிர்த்து வந்த பகைவர்களைத் தடுத்து நிறுத்தி, அந்த இடத்திலிருந்து பின் வாங்கிச் செல்லுமாறு விரட்டிய இடத்தில், எழுப்பப்படுகின்ற ஒரு நினைவுச் சின்னம் (Monument) என்பதாக, இதற்குப் பொருள் கூறினர்.
வெற்றி பெற்ற இடத்தில் வீர நினைவுச் சின்னம் எழுப்பிய விதத்தைக் குறிக்கவே இந்தச் சொல் முதலில் தோன்றியது. என்றாலும், எத்தகைய நினைவுச் சின்னம் எங்கே எடுக்கப்பட்டாலும், அதனை டிரோபெயின் என்றும் அழைத்து வந்தனர்.
நினைவுச் சின்னம் என்றால் என்னவென்று பார்ப்போம். வெகுண்டெழுந்த பகைவர்களை விரட்டி, வெற்றி பெற்ற இடத்தில் நிற்கும் அல்லது அருகாமையில் நிற்கும், ஒரு மரத்தில், ஒரு தகட்டினை அல்லது பலகையினைத்தான் எழுதிப் பதித்து வந்தார்கள் கிரேக்கர்கள். ஒருமுறை பதித்துவிட்டால் மீண்டும் அதனைப் பெயர்த்துவிட்டு வேறு ஒன்றை வைக்கவோ அல்லது பழுது பார்ப்பதோ கூடாது என்பது அரசாங்கச் சட்டமாகும்.
அதனால், தங்கள் நினைவுச் சின்னமானது நீண்டகாலம் வரவேண்டும் என்பதால், வெள்ளித் தகட்டைப் பதிப்பிக்கத் தொடங்கினர். அது