பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

64


தன்னைப்போல் சிலை வடித்துக் கொள்ளலாம் என்ற முறையில் வீரர்களை அனுமதித்திருந்தார்கள்.

பண வசதியுள்ள வீரர்கள் சிலை செய்து நிறுத்திக் கொண்டார்கள். நடுத்தர வாசிகளான வீரர்கள், மரங்களில் வெள்ளித் தகடுகளைப் பதித்து, வீர தீர நிகழ்ச்சிகளை எழுதி மனதை தேற்றிக் கொண்டார்கள்.

ஆனால், ரோமானியர்கள் காலத்தில் இந்த முறை மாறியது. ஒலிம்பிக் ஆலிவ் மலர் வளையத்தை வெற்றி வீரர்களுக்குப் பரிசளிக்காமல், வெள்ளித்துண்டுகளைப் பரிசளித்தார்கள்.

அதன் நோக்கமாவது, தங்கள் வெற்றி வீரர்கள்தான் என்பதை, எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக்காட்டுவதற்கு ஏதுவாகக் கொண்டு செல்லும் தன்மையால், அந்த வெள்ளித்துண்டு வெற்றி நினைவுச் சின்னமாகப் பரிசளிக்கப்பட்டது.

இவ்வாறு, பகைவரை விரட்டிய பாங்கினை வெளிப்படுத்திப் பலருக்கும் குறிப்பிட்டுக் காட்டுகின்ற குறிப்பாக, மரங்களில் பொறிக்கத் தொடங்கிய செயலானது, பந்தயங்களில் வெற்றி பெறுகிற வீரனைப் பாராட்டிப் பரிசளிக்கும் போதும் நினைவுச் சின்னமாக மாறி வந்தது.

கொடூரம் நிறைந்த போர் வெற்றி எங்கே! நட்பு விளைந்த போட்டியில் மலர்ந்த வெற்றி எங்கே! ஒன்றை நினைவுபடுத்த தொடங்கி, ஒன்றை வாழ்த்தத்