பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


விடு என்பது மற்றொரு பொருளாகும். பந்தைத் தரையில் விழ விடாமல், தரைக்கு மேலாகவே வைத்தாடிக் கொண்டிரு என்பதும் வேறொரு பொருளாகும்.

இந்த Volare என்ற சொல்தான் ஆங்கிலத்தில் Volley என்ற மாற்றம் பெற்று வந்துவிட்டது. வில்லியம் மோர்கன் கண்டு பிடித்த விளையாட்டும், பந்தை வலைக்குமேலேயே மாறி மாறி அடித்தாடும் பண்பினையும் பாங்கினையும் கொண்டு விளங்கியதால், இந்த ஆட்டத்திற்கும் Volley Ball என்ற பெயரே அமைந்துவிட்டது.

27.RACKET

Racket என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பந்தடித்தாட உதவும் மட்டை அல்லது ஒரு சாதனம் என்றே அகராதியில் பொருள் கூறப்படுகிறது. அது உண்மையான நிலைதானே!

ஆனால், Racket என்று அழைக்கப்படுகின்ற ஆங்கிலச் சொல்லானது, அராபிச் சொல்லான ராகெட் Rahat என்பதிலிருந்து அல்லவா உருவம் பெற்றிருக்கிறது!

Rahat என்ற அராபியச் சொல்லுக்கு உள்ளங்கை Palm என்பது பொருளாகும்.

உள்ளங்கைக்கும் பந்தாடும் மட்டைக்கும் எப்படி பொருந்தி வரும்? எந்த அளவுக்கு ஒற்றுமை இருக்கிறது என்று கேட்கின்ற ஆர்வமும் ஐயப்பாடும் எழுகின்ற தல்லவா!