பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

68


உள்ளங்கையானது பந்தடித்தாட உதவியிருக்கிறதா என்ற ஒரு குறிப்பினையும் நாம் பார்க்க வேண்டும்!

மின்டன் என்ற ஆட்டத்தில் ஒரு சிறு பந்தை, மட்டையின் (Bat) உதவியால் வலைக்கு மேலே அடித்தாடி விளையாடினார்கள் என்றும், அந்த ஆட்டத்தைப் பார்த்த பிறகு, மட்டையில்லாமல் பந்தை அடித்தாடினால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக் கண்ணுடன் பார்த்த மோர்கன் என்பவர், கையால் பந்தடிக்கும் கலையைத் தொடங்கி வைத்ததாக, கைப்பந்தாட்ட வரலாற்றில் நாம் காணலாம்.

ஆனால், இந்த ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே, பந்தடித்தாடும் மட்டைகள் உபயோகத்தில் இருந்திருக்கின்றன என்றே வரலாறு கூறுகின்றது.

பந்தடித்தாடும் மட்டையின் பரிணாமத்தை விளக்க வந்த விளையாட்டு வல்லுநர்கள், இவ்வாறு விரித்துரைத்து செல்கின்றார்கள்.

பந்தை ஆட்டத்தில் பயன்படுத்துகின்ற விளையாட்டுக்களில், ஆரம்ப காலத்தில் பந்தை உள்ளங்கைகளால் தான் அடித்து ஆடினார்களாம்.

உள்ளங்கைகள் வலியெடுத்ததன் காரணமாக, கைக்கு உறை (Gloves) போட்டுக் கொண்டு அடித்தாடத் தலைப்பட்டார்களாம்.

அதனை அடுத்து, நீண்ட கம்பு ஒன்றை எடுத்து, அதன் தலைப்பாகத்தினைசற்று அகலமாக்கிக் கொண்டு, அதன் மூலம் பந்தை அடித்து ஆடினார்களாம். வளைகோல் பந்தாட்டம், கோல்ப் ஆட்டம் போல.