பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அந்த நிலையும் மாறி, நீண்ட தடியின் தலைப்பாகத்தை இன்னும் அகலமாக்கி, பலகை கொண்டு அதனை உருவாக்கி ஆடிவந்தார்கள்.

அந்த நிலையும் மாறி, அதில் கயிறுகளை குறுக்கு நெடுக்காக நாற்புறமும் வரிந்து இழுத்துக்கட்டி, அந்த விறைப்பான பகுதியினால் பந்தை அடித்தாடினார்கள்.

பிறகு, கயிறுகள் விடைபெற்றுக் கொள்ள, அதில் ஆட்டின் குடல் நரம்புகள் கயிறாகப் பயன்படுத்தப்பட்டன.

அதன்பின், நைலான் கயிறுகளும் (Strings) இடம் பெற்றன.

இவ்வாறாக, பந்தை அடித்தாடும் மட்டையின் வளர்ச்சி ஆட்டத்தில் வேகமும் விறுவிறுப்பும் நிறை நிறைய, அதற்கு ஈடுகொடுப்பதற்கு ஏற்ற தன்மையில் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன.

ஆனால், ஆரம்பகாலத்தில் தோன்றிய அரேபியச் சொல்லான ராகெட்தான், உள்ளங்கை எனும் அர்த்தத்தில், உருவாகியிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து ஏற்றுக் கொண்ட ஜெர்மானியர்களும் Rachen என்று உச்சரித்து அழைத்தவண்ணம் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களைப் பின்பற்றிய ஆங்கிலேயரும், Racket என்று அழைக்கத் தொடங்கினர். மேசைப் பந்தாட்டம், கிரிக்கெட் போன்ற ஆட்டங்களில் பயன்படும் மட்டைகள் Bat என்று அழைக்கப்படுகின்றன. ஆனால்,