பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

70


டென்னிஸ், பூப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், ஸ்குவேஷ (Squash) போன்ற ஆட்டங்களில் பயன்படுகின்ற மட்டைகள் Racket என்றே அழைக்கப்படுகின்றன.

உள்ளங்கையின் அமைப்பைப் பாருங்கள்! முழுங்கையிலிருந்து நீண்டு வந்து, தலைப்பாகத்தில் விரிந்த இடப் பரப்புள்ளதாக அமைந்திருக்கும் கையின் அமைப்பான இறைவன் படைப்பினைப் பார்த்தே, மனிதர்களும் தங்களின் பந்தாடும் மட்டையையும் அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இறைவனின் படைப்பு எத்தகைய இனிய வழியை காட்டியிருக்கிறது பார்த்தீர்களா!

28. EXHIBITION

Exhibition என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பலரறியக் காட்டு, அம் பலப்படுத்து, விளம்பரமாக்கு, என்ற பொருளிலும் ; கண்காட்சி, காட்சிச்சாலை என்றும் தமிழகராதி பொருள் கூறுகின்றது.

இந்த ஆங்கிலச் சொல்லான Exhibition, இலத்தின் மொழியிலிருந்து உருவாகி, பிரெஞ்சுச் சொல்லாக வடிவெடுத்த Exhibeo என்ற சொல்லிலிருந்தே பிறப்பெடுத்திருக்கிறது.

இலத்தின் சொல்லான Exhibeo என்ற சொல்லை நாம் பிரித்து அர்த்தம் காண்போம். Ex என்றால் வெளியே out என்பது பொருளாகும். Habeo என்றால் வைத்திருப்பது, Hold என்பது பொருளாகும்.