பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இந்த பிரெஞ்சுச் சொல்லான Novice என்பது, Novititus எனும் இலத்தீன் சொல்லை பிரதிபலிப்பதாகும். இந்த Novititus எனும் சொல்லுக்கு புதிய (New) என்பது பொருளாகும்.

புதிய எனும் பொருள் கூறத்தக்க அளவில் பயன்படுத்தப்பட்ட இலத்தின் சொல்லானது, சில சமயங்களில் Novus என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கும் புதிய என்பதுதான் பொருளாகும். இந்த Novus என்ற உச்சரிப்பிலிருந்துதான் நாவிஸ் Novice என்று பிரெஞ்சு மொழிக்குப் போய், அங்கிருந்து Novice என்று ஆங்கிலச் சொல்லாகவும் மாறியிருக்கிறது என்றே நம்மால் அறிய முடிகிறது.

புதிய என்றால் என்ன என்று நம்மால் அறிந்து கொள்ள முடியுமா என்ன? விளையாட்டுத் துறையில் Novice என்று ஒரு வரை அழைத்தால், அவர் அந்த விளையாட்டுக்குப் புதியவர் என்பது பொருளாகும்.

ஒரு விளையாட்டைக் கற்றுக் கொள்ளும் புதிய ஆட்டக்காரர், அல்லது அதிகத் திறன் நுணுக்கங்கள் (Skills) இல்லாத சாதாரண ஆட்டக்காரர் என்ற பொருளிலேயே இந்த சொல் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த Novice என்ற சொல், குத்துச் சண்டைப் போட்டிகளில் அதிகமாகப் பயன்பட்டு வருவதை நாம் அறியலாம். அதில் புதியவர்களுக்கான போட்டி என்றே அறிமுகப்படுத்தி போட்டிகள் நடத்தியும் வருகின்றார்கள்.