பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

74


ஆகவே, புதியவர்கள் புதியவர்களுடன் பொருதுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. விளையாட்டில் புதியவர்களுடன் திறமையானவர்கள் பொருதி, அதனால் அபாயம் எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாதே என்பதற்காகவே, புதியவர்கள், திறமையானவர்கள் என்று பிரித்து விளையாடச் செய்கின்றார்கள்.

கற்றுக் கொள்ளும் புதிய மாணவனான சாதாரண ஆட்டக்காரரைக் குறிக்கும் சொல்லாகவே இன்று Novice எனும் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

30. STRATEGY

விளையாட்டுக்களிலும் குறிப்பாக பந்தயங்களிலும், தனக்கோ அல்லது தங்கள் குழுவுக்கோ விளையாட்டை நன்கு ஆடத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது; விளையாட்டுத்திறன் துணுக்கங்கள் அனைத்திலும் தேர்ந்திருந்தால் மட்டும் போதாது.

எதிர்த்து ஆடுகின்ற தனிப்பட்ட ஆட்டக்காரர் அல்லது ஒரு குழுவினுடைய திறத்திற்கும் ஆட்டத்தின் தரத்திற்கும் ஏற்ப எதிர் நின்று ஈடுகொடுத்து ஆடும் பொழுதுதான், ஆட்டம் சுவையாகவும் இருக்கும். சுவாரசியமாகவும் தோன்றும்.

இல்லையேல், எதிர்க்குழு எளிதாக ஏமாற்றி அல்லது அங்குமிங்கும் அலைக்கழித்து, வெற்றி பெற்றுச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அதனால்தான், எதிர்த்தாடுபவரின் திறம் கண்டு, அதற்கேற்ப ஆடவேண்டும் என்று ஆட்டவல்லுநர்கள் பயிற்சி நேரத்தின்போது அறிவுரை கூறுவார்கள்.