பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அந்த அடிப்படைத் தன்மையில்தான், Strategy என்ற சொல்லும் இராணுவ நடைமுறையின் பின்னணியில் தோற்றம் பெற்றிருக்கிறது.

எதிர்த்து வரும் பகைவர்களின் சேனையை எவ்வாறு விரட்டி அடித்து வெற்றிபெற வைப்பது என்ற நோக்கத்தைப் போலவே, எதிர்த்துவரும் குழுவை எவ்வாறு வெற்றி கொள்வது என்று எண்ணிசெயல் படத் துண்டும் வகையில் இந்த சொல் மெருகேறிய தன்மையில், மேன்மை பெற்று வந்திருக்கிறது என்றே நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

31. STUNT

ஸ்டண்ட் என்று சொன்னவுடனேயே நமது நினைவுக்கு வருவது சினிமாவில் நடைபெறும் சண்டைக் காட்சிகள்தான். அந்த அளவுக்கு Stunt என்ற வார்த்தை, அந்த நிகழ்ச்சியுடன் இரண்டறக் கலந்து போயிருக்கிறது.

இந்த ஸ்டண்ட் என்ற வார்த்தையும், யாராவது ஒருவன் செய்வதாக உறுதியளித்துவிட்டு, அதிலிருந்து பின் வாங் கிப் போவதைக் குறிப்பதற்காகவும் சில சமயங்களில் பயன்படுகிறது.

தமிழ் அகராதியில் Stunt என்ற சொல்லுக்கு பொருள்காண முயல்வோமானால், வளராமல் தடை செய், பகட்டு விளம்பரம், அதிர்ச்சி தரும் செயல் என்றே விளக்கம் கூறியிருப்பதை நாம் கண்டு திகைக்கிறோம்.