பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

78


வல்லுநர்களும் நம்மைப்போல்தான் உண்மையான பொருள் காணும் முயற்சியில் குழம்பிப் போயிருக்கின்றார்கள். இந்த Stunt என்ற வார்த்தையின் ஆரம்பமே, கருமேகம் சூழ்ந்த வானம் போல, ஒரு குழப்ப நிலையைத்தான் காட்டுகிறது என்றே அபிப்ராயப் பட்டிருக்கின்றார்கள். ஏனெனில், ஒவ்வொரு முறை முயலும் பொழுதும் புதிய புதிய பொருள் தோன்றி ஒரு முடிவு தெரியாத குழப்ப நிலையை உண்டாக்கி விடுகிறது.

இந்த சொல்லுக்குப் பொருள் தேடிய ஒரு சிலர், கம்பி மேலும், கம்பு மேலும் வித்தைகளை புரிகின்ற கழைக் கூத்தாடியின் சாகசத் திறமையைக் குறிக்கும் பொருள் உரைக்கும் சொல்லிருந்து இந்தச் சொல் உருவாகியிருக்கக் கூடும் என்று அபிப்பிராயப்படுகின்றார்கள். ஆனால் இதற்கு மேல் அவர்களால் தெளிவாக எதையும் கூறமுடியவில்லை.

இன்னும் சிலர் ஸ்டண்ட் என்ற சொல் Stint என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கலாம் என்றும் கூறுகின்றார்கள். Stint என்றால் கடமை, உழைப்பு (Task), என்பது பொருளாகும்.

வேறு சிலர், ஜெர்மனிச் சொல்லான Stundes என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்றும், அந்தச் சொல்லுக்கு ஒரு மணி நேரம் அல்லது நேரக்கூறு என்பதாகவும் பொருள் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு ஆராய்ச்சியாளர் அபிப்பிராயமும் ஒத்துப் போகாதவாறு சென்று கொண்டிருந்தாலும், ஆங்கிலேயர்களின் வரலாற்றுக் குறிப்பால் ஒரு முக்கியக்