பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

80


இரண்டு சொற்களின் பொருளையும் இப்பொழுது நாம் இணைத்துப் பார்த்தால், வெளியே செய்தல் என்பதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், இந்தச் சொல் மிகவும் பொருள் பொதிந்ததாகவே அமைந்திருக்கிறது. அமைக்கப்பட்டும் இருக்கிறது. ஏனென்றால், மனிதர்கள் கட்டுப்பாட்டுடனும் கடமை உணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்ற நேரிய கொள்கையை நிலை நிறுத்தும் இலட்சியப் பாங்கிலேதான் உருவாக்கப் பட்டிருக்கிறது.

வெளியே செய்தல் என்பதன் பொருளாவது, 'நாட்டை நடத்திச் செல்கின்ற சட்டத்திற்குப் புறம்பாக செயல்களைச் செய்தல்' என்பதேயாகும்.

சட்டத்தை மீறி புறம்பாக காரியங்களை ஆற்றுதல் எந்த நாட்டிலும் குற்றம் என்ற நிலை இருந்தாலும், அதனைக் குறித்துக் காட்டுகின்ற செயல் ஒன்றையே படைத்து, சேர்த்து வைத்திருப்பது மிகக் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயமுமாகும்.

பிரான்சு நாடும் இங்கிலாந்தும் மிக நெருக்கமான மண உறவுகளாலும், அரசியல் பிரச்சினைகளாலும் நெருக்கமுற வாழ்ந்த காலத்தில், இந்தச் சொல்லைப் பயன்படுத்தி இருக்கின்றார்கள்.

அப்பொழுது பயன்படுத்தப்பட்ட பிரெஞ்சுச் சொல் Forfaite என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.

சட்டத்தை மீறுகின்ற செயல் மிகக் கடுமையான குற்றமாகும். நாட்டின் சட்டத்தை மீறுகின்ற செயல் புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டதுடன்,