பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தண்டிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது. அந்த குற்றமிழைக்கும் செயலைக் குறிக்கவே Forfaite என்ற சொல் அந்நாட்களில் பயன்படுத்தப்பட்டன.

அது ஆங்கிலத்தில் Forfeit என்ற அளவில் மாறி வடிவம் பெற்றிருக்கிறது. என்றாலும் குறித்துக் காட்டுகின்ற பொருளும் நிலையும் ஒன்றுதான்.

ஆனால், அந்த நிலையைக் குறிக்கும் பொருளிலேதான், விளையாட்டுத் துறையிலும் இந்த Forfeit எனும் சொல் வழங்கப் பெற்றிருக்கிறது.

விளையாட்டை வெறும் பொழுதுபோக்கிற்காகவும், மனம் போன போக்கில் எவ்வாறேனும் ஆடிக் கொண்டிருக்கலாம் என்ற தரங்கெட்ட நிலை மாறி, விதிகளுக்கு அடங்கி ஆடுவதுதான் சிறந்த பண்பு என்ற உயர்நிலையில் விளையாட்டுத் துறை வல்லுநர்கள் ஆட்டக்காரர்களை வழி நடத்திச் சென்றனர்.

அதனால் பண்புக்கும் தரத்திற்கும் மாறுபட்ட செயல்கள் புரிவோரை ஆட்டத்திலிருந்து தள்ளி வைத்தனர். தவிர்த்து நிறுத்தினர், தண்டித்து வெளியேற்றினர். அந்த நிலைமை குறிக்கும் சொல்லாகவே Forfeit என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

Forfeit எனும் ஆங்கிலச் சொல்லுக்கு உரிமையிழத்தல், பறிமுதல் என்றும் தமிழகராதி பொருள் தருகின்றது. அதுதான் உண்மை நிலை, உரிய பொருளும்கூட.

'விளையாட அழைக்கின்ற நடுவரின் சொல்லுக்கு மதிப்பளிக்காது, ஆடுகளம் அல்லது விளையாட்டு