பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

84


நான்கு இடங்களில், வெவ்வேறு பெயர்களில் போட்டிகள் நடைபெற்றிருந்தன.

1. ஒலிம்பிக் பந்தயங்கள்: கிரேக்கக் கடவுளர்களில் மிகவும் வல்லமை வாய்ந்த தலைமைக் கடவுளான சீயஸ் (Zeus) என்னும் கடவுளைப் பெருமைப்படுத்தும் விதத்தில், பிலோபானிசஸ் எனும் மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் பெற்ற பந்தயங்களாகும்.

2. பிதியன் பந்தயங்கள், வெளிச்சத்திற்கும் உண்மைக்கும் கடவுளாக விளங்கிய அப்போலோ எனும் கடவுளை மகிமைப் படுத்துவதற்காகப் பிதியன் பந்தயங்கள் நடத்தப் பெற்றன.

3. நிமியன் பந்தயங்கள்: சீயஸ் கடவுளின் பெயரில் இந்தப் பந்தயங்கள் நடத்தப்பெற்றன.

4. இஸ்த் மியான் பந்தயங்கள் கடல் கடவுளான பொசிடான் எனும் கடவுளின் பெயரில் இந்தப் பந்தயங்கள் நடத்தப் பெற்றன.

நான்கு பந்தயங்களிலும், ஒலிம்பிக் பந்தயங்களே மிகவும் சிறப்பான, பெயர்பெற்ற பந்தயமாக விளங்குவதையே நம்மால் அறிய முடிகிறது. மற்ற மூன்று பந்தயங்களும் வரலாற்று ஏட்டில் இடம் பெற்றதுடன் நின்று விட்டது. மக்கள் மனதில் இடம் பெறவில்லை.

தெய்வங்கள் உறைகின்ற திருத்தலமாக விளங்கிய புனித ஒலிம்பியா மலையடிவாரப் பகுதியில் இப்பந்தயங்கள் நடத்தப் பெற்றன என்பதால், மிகப் புகழ் பெற்றதாக விளங்கியது போலும்.