பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இந்தப் பெயருடன் ஒலிம்பியாட் என்ற சொல்லும் இணைந்து, இந்தப் பந்தயங்களுக்கு மேலும் புகழ் சூட்டியிருக்கலாம் என்றே பலர் கருதுகின்றனர்.

Olympiad எனும் கிரேக்கச் சொல்லுக்குக் கால அளவு (Measure of Time) என்பதே பொருளாகும். அந்தக் கால அளவை 4 ஆண்டுகள் என்று இந்த சொல் குறிப்பிடுகிறது.

ஒலிம்பியாட் என்றாலே நான்காண்டுகள் என்றே குறிப்பிடுகின்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பியா எனும் இடத்தில், ஜூலை மாதத்தில் நடைபெற்ற பந்தயங்களே ஒலிம்பிக் பந்தயங்கள் ஆகும்.

இதில் ஒரு சிறப்புக் குறிப்பையும் நாம் காணலாம், ஒலிம்பிக் பந்தயங்கள் நடத்தப் பெற்ற எந்ந ஆண்டினை நாம் எடுத்துக் கொண்டாலும், அது 4 என்ற எண்ணால் சரியாக வகுக்கப்படும் எண்ணாக இருப்பதையே நாம் காணலாம்.

பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் 1896ம் ஆண்டு கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரத்தில் நடத்தப் பெற்றன. இந்த இரண்டு ஆண்டுகளின் எண்ணிக்கையும் 4 என்ற எண்ணால் மீதியின்றி வகுக்கப்படுவதாகவே விளங்குவதை நீங்கள் காணலாம்.

மேலும், ஒருமுறை அதாவது நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய ஒரு ஒலிம்பிக் பந்தயம், ஏதாவது ஒரு காரணத்தால், நடத்த முடியாமல் நின்று போனால், தொடர்ந்து அடுத்த ஆண்டில் நடத்தப் பெறாமல், அடுத்த நான்காவது ஆண்டில்தான் நடத்தப்