பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


ஆனால், கிரேக்கம் ரோமானியருக்கு அடிமைப்பட்ட உடனேயே, எல்லாம் தலைகீழாக மாறிப்போயின. வெறும் இலைதழைக்கு யார் போட்டியிடுவார் என்றெல்லாம் கலப்பில் கலந்த வீரர்களும் களைப்படைந்து பேசத் தொடங்கிவிட்டனர். அதனால் பந்தயங்களின் புனிதம் பாழானது மட்டுமல்ல, பந்தயமே அழிந்தொழிந்து போவதற்கும் காரணமாய் அமைந்து விட்டது.

பிறகு 1400 ஆண்டுகள் கழிந்தன. 1872 ஆம் ஆண்டு யார் அமெச்சூர் என்ற ஒரு கேள்வியானது, அமெரிக்க நாட்டில் எழுந்தது. மகிழ்ச்சிக்காக விளையாடுபவர்கள் என்று சிலர் முடிவு கட்டினர். பண லாபத்துக்காக விளையாட்டில் பங்கு பெறாதவர்கள் என்றும் சிலர் கூறினர். தனது திறமையை விலை பேசாத தகுதியாளர் என்றனர். விருப்பத்துடன் விளையாட்டில் ஈடுபடுபவர். புகழ் ஒன்றைப் பற்றியே குறிக்கோளாகக் கொண்டவர் என்றெல்லாம் விளக்கங்கள் கொடுத்தனர்.

இந்தப் பிரச்சனையான அமெச்சூர், வணிக விளையாட்டாளர் என்றெல்லாம் பணம் பெறும் முறையினால்தான் பிறந்தது. இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்காக, ஆங்கிலோ சேக்சன் சொல் ஒன்று தோன்றியது. இது 1788ம் ஆண்டிலே இங்கிலாந்தில் தோன்றியது. அவர்கள் கொடுத்த விளக்கமானது ஜேக்சன் என்பவர் நடந்துகொண்ட விதத்தை முன் உதாரணமாகக் காட்டி விளக்கம் கொடுத்திருந்தது.

கை முஷ்டியால் (Bare Knuckle) குத்திக்கொள்ளும் சண்டைப் போட்டியில், பங்கு கொண்ட அந்நாள் குத்துச்