பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


இந்த ஸ்டேட் அளவு தான் ஓடும் பந்தயத்தின் தூரம் ஆகும். மணற்தரையான அந்த தூரத்தை ஓடுவதுதான் ஓட்டப்பந்தயமாகும். இந்த ஓடும் தூரத்தைச் சுற்றிலும் உட்கார்ந்து பார்க்க பார்வையாளர்கள் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

பார்வையாளர்கள் இருக்கை, பந்தய மைதானம் எல்லாவற்றையும் சேர்த்து அவர்கள் Stadium என்று அழைத்தனர், 200 கெஜ தூர ஓடும் பாதையைத் (Track) தான் Stade என்று அழைத்தனர்.

இவ்வாறு ஒரு முறை ஓடும் ஸ்டேட் போட்டியில் முதன் முதலாக வெற்றி பெற்ற வீரன் என்ற புகழைப் பெற்றவன் கரோபஸ் என்பவனாவான். தொழிலில் சமையல்காரன் என்றாலும், துரிதமாக ஓடிய திறமைக்காரன் அல்லவா அவன்!

ஒருமுறை ஓடும் ஸ்டேட் போட்டியானது, பந்தயங்களில் இரண்டு முறை ஓடுவதாக, அதாவது ஓடத் தொடங்கிய இடத்திலிருந்து 200 கெஜ தூரத்தை ஓடி, பின்னர் திரும்பி மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வருவது போல, போட்டிகள் நடைபெற்றன.

இவ்வாறு ஒருமுறை ஓடிய போட்டியை Dromos என்றனர். இரண்டு முறை ஓடி முடித்த போட்டியை Dialos என்று அழைத்தனர். இருபத்திநான்கு முறை திரும்பத் திரும்ப ஓடிய போட்டியை அதாவது 12 ஸ்டேட் தூரத்தை Dolichos என்று அழைத்தனர். ஆகவே, ஸ்டேட் எனும் போட்டிதான் முதலில் நடைபெற்ற போட்டி என்பதால், அதன் பெயரால்தான் இந்த ஸ்டேடியம் என்று பெயர் பிறக்கலாயிற்று.