பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

பயன்தரும் நூல் என்று நீங்கள் கருதினால், பயன்படுத்துங்கள். பதமான சொற்கள் அல்ல, வேறு சொல்லை உருவாக்கி இருக்கலாமே என்று நீங்கள் நினைத்தால், தயவு செய்து பரிகாசம் பண்ணாதீர்கள். படைப்பைப் பழிக்காதீர்கள்.

திருத்தமான சொற்களைத் தாருங்கள். பொருத்தமான சொற்களைப் புகுத்தி, இந்த அகராதியை முழுமையாக்க உதவுங்கள். இன்னும் பல விளையாட்டுக்களுக்குரிய கலைச் சொற்களை, அடுத்த பதிப்பில் கொண்டுவர முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக் கிறேன்.

'இந்நூல் பயன் தரும் நூலே, பலருக்கும் பயன்படும் நூலே' என்று நீங்கள் உணர்ந்தால், மகிழ்ந்தால், அது என்னை வழி நடத்தி எழுத வைத்த இறைவனின் ஈடிலா கருணையின் பெருமையாகும்.

பிழைகள் மிகுதி என்று உங்களுக்குப்பட்டால், அது எளியேனின் அறியாமை என்று கொள்ளுமாறு உங்களை வேண்டுகிறேன்.

மேலும், விளையாட்டுத் துறையில் பல புதிய நூல்களை உருவாக்கும் முயற்சியில் முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கும் என் அனுபவங்கள், இந்த நூலை இன்னும் செழுமைப்படுத்த உதவும் என்றே நம்புகிறேன்.

இந்நூலை உருவாக்க உதவிய ஆர். ஆடம் சாக்ரட்டீசுக்கும், அழகுற அச்சிட்ட கிரேஸ் பிரிண்டர்சுக்கும் என் அன்பு கலந்த நன்றி.

அன்பன் - எஸ். நவராஜ் செல்லையா.

+ 1988 ஆம் ஆண்டு முதல் பதிப்பின்போது எழுதிய ஆசிரியரின் சிேன்னுரை அப்படியே பிரசுரிக்கப்படுகிறது.

விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி என்ற நூலும் வெளிவந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நூலைப் பற்றிய கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

- பதிப்பகத்தார்