பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 7

ஆசிரியரைப் பற்றி அறிஞர்கள் சொல்கிறார்கள்

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா உடற்கல்விக்கு அளித்த அர்பணிப்பு, நண்பர்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பு, ஆர்வம், பாசம், பணிவு, இனிய சொற்கள், ஆற்றிய உதவிகளும், பணிகளும் அவர் மறைந்தாலும் என்றும் ஆயிரக்கணக்கானோர் நெஞ்சங்களில் மறையாது. அவர் ஏற்றிய தீபம் அனையாது மேலும், சுடர் விட்டு பிரகாசிக்க நம்மைப்போன்றோர் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பேராசிரியர். இரத்தின நடராஜன்

விளையாட்டுத் துறையின் வியன் மிகு கலைச் சொற்கள் குற்றால அருவி ஓடி வருவதைப்போல தங்கு தடையின்றிய பேச்சு, ஆழமான கல்வி, பரந்துபட்ட உலக அறிவு, பண்பாட்டின் சிகரம், இனிமையானவர், நகைச்சுவை நல்லரசு, செயலிலே விறுவிறுப்பு. விளையாட்டுத் துறையிலே ஒப்பாரும், மிக்காரும் இல்லாத உயர்ந்த நிலை.

இவர்தான் நவராஜ் செல்லையா.

தமிழ்த் தொண்டர். கோ. முத்துப்பிள்ளை

. டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் ஓய்வறியாத உழைப்பாளர். அவரது சுறுசுறுப்பும், போலித்தனமில்லா பேச்சும், தளராத தன்னம்பிக்கையும் அவரைச் சுற்றி இருக்கும் எல்லோரையும் எழுச்சிபெற வைக்கும்.

டாக்டர். பொற்கோ