பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

அதாவது காலையில் 6.30 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால், 7 மணிமுதல் 8 மணி வரை ஒரு வீட்டில் டியூஷன், பிறகு 8-15 லிருந்து 9-15 வரை 2வது டியூஷன். உடனே பள்ளிக்குப்போயாக வேண்டும்.

மாலையில் 4.30 மணிக்கு பள்ளிவிட்டதும் 5 முதல் 6 வரை, 6.30 முதல் 7.30 வரை டியூஷன். பிறகு தான் வீட்டுக்கு வரவேண்டும். இதற் கிடையில் நான் எம். எ தேர்வுக்காக படித்துக் கொள்ள வேண்டும். சினிமா வாய்ப்புக்கும் அலைய வேண்டும்.

இந்த நிலையில் என் தந்தையின் மரணச் செய்தி வந்தது. எனக்கு இருந்த ஒரே ஆதரவும் ஆறுதலும் ஒடிந்து விழுந்தது.

மனைவி குழந்தைகளை திருச்சியில் விட்டுவிட்டு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று ஒரு இடைக்கால ஏற்பாடு நடந்தது.

கேமரா மேன் ஜி. கே. குட்டி அவர்களின் நண்பர் ஒருவர். சுரேஷ என்பவருடன் சேர்ந்து இருக்கலாம் என்று யோசனை வந்தது.

விதி நடத்திச் செல் கிற போது மறுக்க முடியுமோ? குடும்பத்தைப் பிரிந்து, யுக்தி மிக்க ஒருவருடன் சேர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது.

என்னுடைய எழுத்து ஆர்வத்தையும் சினிமா முயற்சியையும் நன்கு புரிந்துகொண்ட அவன், சிரித்துக் கொண்டே என் வேகத்தை வேகப் படுத்தினான். அதனால் என்ன லாபம் அவனுக்கு என்றால், என் சம்பளம் முழுவதும் சாப்பாட்டுக்கும், வீட்டு வாடகைக்குமே சரியாகப்போயிற்று. பேசிப் பேசி வாய்க்கு ருசியாகச் சாப் பிட் டான் அவன். செலவைப் பற்றி நான் சிந்திக்கவே இல்லை.