பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

நாளைக்கு சம்பாதித்து விடலாம் என்ற ஒரு நம்பிக்கை வேகத்தில், நானும் யோசிக்காமலேயே செலவு செய்து வந்தேன்.

ஒரு நாள் நாம் ஒரு சினிமாபத்திரிக்கை ஆரம்பிக்கலாமே! என்று தூபம் போட்ட சுரேஷ், நீங்கள் ஆசிரியர், நான்

வெளியீட்டாளர் என்று கூறியதை, நானும் ஆவேசமாக ஏற்றுக் கொண்டேன்.

சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிக்கையல்லவா கலைநீதி என்று பெயர் வைத்தேன். மாதப் பத்திரிகை விலை 20 பைசா, ஆண்டு சந்தா2 ரூபாய்.

எல்லா செலவையும் செய்து, பள்ளியில் எல்லா ஆசிரியைகளிடமும் ஆண்டு சந்தா வசூலித்து, தெரிந்தவர்களிடம் எல்லாம் ஆண்டு சந்தாவுக்கு அலைந்து 100 அங்கத்தினர்கள் கொண்ட பட்டியலையும் மொத்த பணத்தையும் கொண்டு வந்து சுரேஷிடம் கொடுத்தேன். அத்தனைஆர்வம்.

முதல் இதழாயிற்றே! இன்னும் கொஞ்சம் பணம் இருந்தால் இன்னும் சிறப்பாக இதழைக் கொண்டு வரலாமே என்றான். என் கையிலே, பணமில்லை, கையில் தானே ஒன்றுமில்லை. விரலைப் பார்த்தேன்.

கல்யாண நினைவாகப் போட்ட மோதிரம் விரலிலே மின்னிக்கொண்டு இருந்தது. ஆபத்துக்குப் பாவமில்லை என்று கழற்றிக் கொடுத் தேன். அடகு வைத்து விட்டு இத்துடன் எல்லாப்பணத்தையும் சேர்த்துக் கொண்டான்.

முதல் இதழ் வந்தது. அதில் ஆசிரியர் இடத்தில் என் பெயர் இல்லை. ஆசிரியர் வெளியிடுபவர் என்று அவன் பெயரையே போட்டுக்கொண்டான், என்ன செய்வது?