பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி I () |

முதல் ஏமாற்றம். அன்பான மோசடி, என் சோற்றையும் தின்று கொண்டு, என்முகத்திலே நோகாமல் சேற்றையடித்த அந்த நயவஞ்சகண் முகத்தில் இனி விழிக்கக் கூடாது என்று குடியிருந்த மேல்மாடிக் குடிசையை விட்டு வெளியேறினேன்.

அவனைப் பார்க்கவே வெறுத்ததால் எனக்கு என்ன இழப்பு ஏற்பட்டது என்றால், என்னுடைய கல்யாணமோதிரம், வட்டிக் கடையிலே முழுகிப் போயிற்று. அவ்வளவுதான்.

எப்படி இவ்வளவு எளிதாக ஏமாந்து போனேன் என்று இன்றும் எண்ணிப் பார்க்கிறேன். புரியவில்லை.

காரணம் இலக்கிய வெறி தான். பத்திரிக்கை ஆசிரியராக வேண்டும் என்று என்னுள்ளே பற்றி எறிந்த பாழான வெறியால் தான் பணம் போயிற்று, பள்ளியில் இருந்த மரியாதை போய், பாவம், பரிதாபம் என்று பேச்சுக்கள் கேட்கின்ற நிலைமையும் ஏற்பட்டது.

இந்த அவமானத்தைத் துடைத்துவிட்டு, ஆசிரியர்ஆகியே ஆக வேண்டும் என்ற எண்ணம் துடித்தது. புயலாக அடித்தது. ஆசிரியர் ஆகிவிட வேண்டும் என்று பின்னிருந்து விரட்டியது அந்த வேகத்தில் எல்லா காரியங்களையும் பரபரப்புடன் தொடங்கினேன்.

சுரேஷ் உறவை முறித்துக் கொண்டு குடியிருந்த கோடம் பாக்கத்தில் உள்ள, ரெங் காராஜபுரம் சாலை வீட்டிலிருந்து வெளியேறி, அதே ரெங்கராஜபுரம் சாலையில், விஸ்வநாதபுரம் முதல்-வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத் தேன். குடும்பத்தையும் மீண்டும் வரவழைத்துக் கொண்டேன்.

பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கிவிட வேண்டும்! என்று என் மனைவியிடம் கூறினேன். இப்பொழுது வேண்டாமே. இன்னும் கொஞ்சம் வசதி வரட்டுமே என்று ஆலோசனை