பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

வசதி வரட்டும் என்று பார்த்தால், வயதாகிப் போகும். கிழமாகிப் போய் விடுவோம். கஷடமோ, நஷடமோ, பத் திரிக் கையை ஆரம்பித்து விடுவது என்று முடிவு செய்துவிட்டேன் என்றேன்.

கஷடமோ நஷ்டமோ என்று எப்பொழுது கூறினேனோ , அவை எந்தக் கெட்ட தேவதையின் காதில் விழுந்ததோ, அந்த கஷடமும் நஷடமும் என்னை விடாப்பிடியாகக் கெட்டியாகக் கட்டிப் பிடித்துக் கொண்டன. என்னை விடவே மாட்டேன் என்று அவையும் என் வீட் டோடு ஒரு அங்கமாய் தங்கிக் கொண்டன.

பத்திரிக்கை ஆரம்பித்தாக வேண்டும் என்று முடிவாகிவிட்டது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம்? இப்படி ஒரு போராட்டம்.

ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும். ரெங்கராஜபுரம் ரோட்டிலே மிகவும் யோசனையுடன் கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி நடந்து கொண்டிருந்தேன். ஒரு அன்பர் தெரிந்தவர் என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

என்ன சார் இது இந்த நேரத்துலே? அதிசயமா இருக்குதே! இந்நேரத்துலே எப்பவும் தூங்கி கிட்டு தானே இருப் பீங்க. அதிசயம் தான் என்று இரண்டுமுறை அதிசயம் என்ற வார்த்தையை உதிர்த்து விட்டார். அவரை ஒரு மாதிரியாக சமாளித்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

எனக்குள்ளே, அதிசயம் என்ற வார்த்தை அழுத்தமாக விழுந்தது. எனது அந்தராத்மா விழித்துக் கொண்டது. தேடிக் கொண்டிருந்த தலைப்பு கிடைத்துவிட்டது என்பதை உணர்ந்தேன். சிந்தை சிலிர்த்துக் கொண்டது.