பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

எனது பத்திரிக்கைக்கு அதிசயம் என்று பெயர் சூட்டி விட்டேன். அடுத்து எக்மோரில் உள்ள மேஜிஸ் டிரேட் அலுவலகத் தில் பெயரைப் பதிவு செய்து கொள்வது, அச்சகத்தாரிடம் அனுமதி பெறுவது போன்ற காரியங்கள் எல்லாம் துரித கதியில் நடந்தேறின.

காரணம் பிறகு தான் தெரிந்தது. ஆனால் அப்போது எனக்கு எதுவும் தெரியவில்லை. என்னுடைய பத்திரிக்கைக்கு உதவி செய்ய ஒர் ஆள் வேண்டும் என்று தேடுவதற்குள், துரைராஜ், என்பவர் ஒருவர் வந்து அவராகவே ஆஜராகி, சேர்ந்து கொண்டார். அப்படி இல்லை. - தன்னை இந்தப் பத்திரிக்கையோடு இணைத்துக் கொண்டார்.

பத்திரிக்கை உதவி ஆசிரியர் அவர்தான். சர்குலேஷன் மேனேஜர் அவர்தான். ஆபீஸ் பாய் அவர்தான். பத்திரிக்கையில் பாதி விஷயங்கள் எழுதுவதும், அச்சகத்திற்கு போய் புரூப் திருத்துவதும், பத்திரிக்கையை விற்க ஏஜெண்ட் தேடி

அமர்த்துவதும் அவர்தான்.

இத்தனை சாமார்த்தியம் உள்ள அவருக்கு சம்பத்து என்பது ஒரு நாலைந்து சயை மல் பாத்திரங்கள், பாய் தலையணை. ஒரு வயதான தாய்.

சம்பளம் என்று ஒன்றுமில்லை, எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். அதாவது அப்போதைய தேவைக்கு வேண்டும் என்பார். 10 பைசா, முதல் 10 ரூபாய் கொடுத்தாலும், 100 ரூபாய் கொடுத்தாலும், முகத்தில் எந்தவிதமான சலனத்தையும் பார்க்க முடியாது. சோகமும் காட் டாமல்

சிரிக்கவும் செய்யாமல் விடைபெற்றுக் கொண்டு போய்விடுவார்.

அப்படி ஒரு நபரிடம் அகப்பட்டுக் கொண்டு முதல் இதழைக் கொண்டு வந்து விட்டேன். ஆனந்தவிகடன் சைஸ், 64