பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா,

பக்கங்கள், விலை 50 காசுகள், ரூபாய் 200 என்ற எனது சம்பளத்தில், 100 ரூபாய் செலவு.

முதல் இதழ் நன்றாக விற்றது. விஞ்ஞானம், சரித்திரம், தத்துவம், உளவியல் என்று பெரிய பெரிய விஷயங்களை எழுதினேன். முதல் இதழ் விற்றாலும், நமக்கு காசு வராது, 2வது இதழ் வெளிவந்து, மூன்றாவது இதழுக்குப் போகும்போது தான் பணம் வரும் என்றாலும், முதல் 6 மாத இதழ்களுக்கு, நாம் தான் முன் பணம் போட்டு பத்திரிக்கை நடத்த வேண்டும்.

விளைவு - வீட்டில் உள்ள நகையுடன், சமையல் பாத்திரங்கள், அண்டா, குண்டா, இட்லி கொப்பறை என்று எல்லாமே மார்வாடியிடம் போய் சேர்ந்தன. வீடு, இந்த காலக்கட்டத்தில், எதுவுமே இல்லாமல் சுத்தமாகவே தெரிந்தது தான் எனது இலாபம்.

ஒரு மாதப் பத்திரிக்கையின் ஆசிரியர், எனது அதிசய இதழின் மாநில ஏஜெண்ட் ஆவார், எனக்கு உதவுவதற்காகவே ஏஜெண்சி எடுத்தவர், தனது பத்திரிக்கையுடன் என் இதழையும் சேர்த்தே பல கடைகளிலும் போட்டார்.

முதல் மாத இதழ் என்னுடையது நன்றாக விற்றது. நல்லது தான். ஆனால் அவரது பத்திரிக்கை பல கடைகளில் விற்காமல் போனது தான் எனக்கு வந்த கஷடம். சோதனை. எனது அடுத்த மாத இதழை, ஒரிரு கடைகளில் போட்டு விட்டு, அதிசயத்தை தனது குடோனில் மூட்டைக்கட்டிப் போட்டுவிட்டார். இப்படி அவர் செய்த துரோகம், என்னைக் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் அழுத்திவிட்டது.

விளையாட்டுத் துறை இலக்கியம் எழுதத்தானே நான் சென்னைக்கு வந்தேன் பிறகு ஏன் வேண்டாத ஒரு துறையில், பத்திரிக்கை தொடங்கினேன். தொடர்ந்து நடத்தினேன்!

இதனால் என்ன கவுடம் நஷடம் என்று கேட்கலாம். சம்பளம் 200 ரூபாய், வீட்டு வாடகை 75, அச்சகத்திற்கு 100