பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

14. வறுமையும் வியாபாரமும்

49 , ரயில் வே பார்டர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை 33 என்ற முகவரி, ஆரம்ப கால எனது புத்தகங்களில் அச்சிடப்பட்டிருக்கும்.

அந்த வீடு மாம்பலம் ஸ்டேஷனுக்கும் கோடம் பாக்கம் ஸ்டேஷனுக்கும் இடையிலே அமைந்திருந்த ஒரு இடம். பழைய பங்களா அமைப்பிலே இருந்த அந்த கட்டிடத்தின் முன்புறம். ஒரு கிரவுண்டுக்கு மேலே காம்பவுண்டு போட்ட காலியிடமாக இருந்தது.

ஒரு பெரிய ஆபிசருக்குச் சொந்தமான இடம். ஆனால் அவரோ அதைப் பற்றிக் கவட்ை படாமல், வாடகை வந்தால் போதும் என்றதோடு வேறு எதையும் எண்ணாமல் இருந்ததால். அந்த வீட்டினைப் பற்றி வெளியில் பல விதமான கெட்டப்பெயர்களும் இருந்து வந்தன.

எந்த விதமான விசாரிப்பும் இல்லாமல் ஏதாவது ஒரு வீடு கிடைத்தால் போதும் என்ற வேகத்தில், ஒரே ஒரு அறை, ஒரு சமையலறை என்னும் சிறிய வீட்டில் (ஒரு போர்ஷனில்) குடி வந்து விட்டேன்.

வந்ததும் தான் ஏன் வந்தோம் என்றாகிவிட்டது.

ஒரு நாள் இரவு திடு திடென்று ஆட்கள் ஒடுகிற சத்தம்.