பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

எங்கள் வீட்டுக் கதவுகள் தட்டப்பட்டு, ஒரு பெண் ஒடி வந்து உள்ளே நுழைந்து பதுங்கிக் கொண்டாள். போலீசார் கெடுபிடி.

கொஞ்ச நேரம் கழித்து, சப்தம் அடங்கியது. என் வீட்டில் ஒளிந்திருந்த பெண், எதுவுமே நடக்காதது போல வெளியேறி, பக்கத்திலே உள்ள பெரிய வீட்டிற்குள் புகுந்து விட்டாள்.

அந்த வீட்டில் வசிப் பவர்கள் ஒரு மாதிரி போல் இருக்கிறதே என்று நான் சந்தேகப்பட்டது உண்மையாயிற்று. அந்த வீட்டுக்கு யார் வந்தாலும், அந்த டைப்பில் தான் வருவார்களாம். அரிசி வியாபாரம், தேங்காய் வியாபாரம் என்று ஏதோ சொல் லி வீட்டிற்கு குடி வந்து, தங்கள் ‘சொந்த பிசினஸை தொடங்கி விடுவார்களாம். கேட்க மேய்க்க ஆளில்லாத காரணம் தான்.

பக்கத்திலே இருந்த எதிர் வீட்டுக்காரர் இஞ்சினியர் ஒருவர். அவரது குடும்பம் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே போகும். ஆனால் பேசமாட்டார்கள். ஏன் என்று எதுவும் புரியாத குழப்பமாக எங்களுக்கு இருந்தது.

ஒரு நாள் அவரோடு பேச நேர்ந்தபோது, பள்ளிக்கூட அட்மிஷன் பேச்சு வந்தது. நான் வித்யாமந்திர் எனும் பள்ளியில் ஆசிரியர் என்று சொன்னேன். விவரம் புரிந்து கொண்ட அவர், என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

அந்த வீட்டுக்கு வருகிறவர்கள் எல்லோருமே, ‘அந்த ‘பலான வேலையைச் செய்கின்றவர்கள், நீங்களும் அந்த வீட்டிற் குக் குடிவந்தத்சல், நாங்கள் உங்களைத் தவறாக நினைத்து விட்டோம் என்று மன்னிப்பு கேட்டார்.

பனை மரத்தின் கீழ் பாலைக் குடித்தது யார் குற்றம்? என் -நிலைமை புரிந்தது. வேறு வீடு பார்க்கலாம் என்றால், வறுமை விடவில்லையே! வறுமை யின் கோரப் பிடியில் அடங்கிக் கிடந்த எனக்கு, பொறுமையே மேலோங்கியிருந்தது. திறமை