பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 109

ஒருவர் பாரதிராஜா, இன்னொருவர் இளையராஜா.

நாடகம் நடத்தியதில் என்ன பலன் என்றால், வருகிற சம்பளத்துக்கு மேலே, கொஞ்சம் செலவுக்கு பணம் கிடைத்ததுதான்.

குடும்பத்தை இனிமேல் கஷடத்திற்கு ஆளாக்கக் கூடாது என்ற ஒரு ஆழ்ந்த முடிவு தான். என் புத்தியை புத்தகம் எழுத விடாமல் செய்தது.

உள்ளத் தின் ஒரு மூலையில், நீ காலத்தை வீணாகக் கழிக்கிறாயே என்று உறுத்தல் ஒன்று உறுத்திக் கொண்டேயிருக்கும். வறுமை ஒன்று வந்து, வழியை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று அழுத்திக் கொண்டேயிருக்கும். இப்படியே , என் மனம் ஒடிக்கொண்டும் வாடிக் கொண்டும் இருந்ததே தவிர உட் கார்ந்து யோசிக்கக் கூட விடாமல் விரட்டியது.

இந்தச் சூழ்நிலையில்தான், நான் ஒரு ஆளை சந்திக்க வேண்டியிருந்தது. இது காலத்தின் கட்டாயமாகவே அமைந்துவிட்டது.

என்ன வேலை செய்தாலும் நான் எந்தத் திசையில் போனாலும், நான் புத்தகம் எழுதியாக வேண்டும் என்பது இறைவன் எண்ணம் போலும். அந்த சக்திதான் என்னை ஆட்படுத்தியது போலும். அந்த விரும்பத்தகாத ஆளினை, எனக்கு அந்த சக்திதான் காட்டிக் கொடுத்துவிட்டது.

சென்னையில் பல இடங்களுக்குப் போய் வர சைக்கிள்தான் வாகனமாக இருந்து உதவியது. காரைக் குடி கல்லூரியில் பணியாற்றியபோது, என் முதல் மாத சம்பளத்தில் வாங்கிய சைக்கிள் அது.

V. தியாகராய நகர் உஸ் மான் ரோட் டி. ான வநது