பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 111

சைக்கிள்களை நான் வாங்கித்தர வேண்டும். அந்த ஆள், வேலை பார்ப்பது - செலவு போக, லாபத்தில் பாதி என்றும் முடிவாயிற்று.

யுனைடெட் பேங் ஆப் இந்தியா என்ற பேங்கில் வேலை செய்த ஒரு நண்பர், லோன் வாங்கித் தருகிறேன் என்றார். லோனுக்கு முன்பணமாக 300 ரூபாய் கட்ட வேண்டும் என்றார்.

வாங்கிய அந்த மாத சம்பளத்தை பேங்கில் கட்டிவிட்டு செக் கை வாங் கிக் கொண்டு, சைக் கிள் கடையில் போய் சைக் கிள்களைப் பெற்றுக் கொண்டு, மேற்கு மாம்பலம் ஏரிக்கரைத் தெருவில் உள்ள 59ம் எண்ணுள்ள கடையில், முதன் முதலாக வியாபாரத்தைத் தொடங்கினேன்.

இதில் என்ன விசேஷம் என்றால், கையில் இருந்த பணத்தையெல்லாம் (அதாவது சம்பளத்துை கொடுத்துவிட்டு, சைக் கிள்கள் வாங்கி யாயிற்று. கொஞ்சம் கடன் வாங்கி, கடைக்கு அட்வான்ஸ்-ம் கொடுத்தாகிவிட்டது. காலையில் 6 மணிக்கு கடையும் திறந்தாகி விட்டது.

காலையிலே வீட்டிலே டீ கூட போடவில்லை. வீட்டில் நான், என் மனைவி. 3 குழந்தைகள். யாரும் எதுவும் சாப்பிடவில்லை.

சைக்கிள் ஷாப்பில் வருகிற பணத்தைக் கொண்டு ஏதாவது சமைத்து சாப்பிடலாம் என்று நாங்கள் (குடும்பமே) காத்துக் கொண்டிருந்தோம். என்னே இறைவனின் சோதனை!

அன்று மாலை 5 மணி வரை ஒரு பத்து பைசாவுக்குக் கூட வண்டி ஒடவில்லை. பசியோ பசி என்று காத்திருந்தோம். இனி பொறுக்க சக்தியில் லை இறைவா என்று என் உள் மனம் ஓங்காரமிட்டுக் கொண்டேயிருந்தது.

சரியாக மாலை 6 மணி அளவில், ஒரு ரூபாய்க்கு வண்டி