பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

வாடகைக்கு ஒடி. கிடைத்தது பணம், எடுத்துக் கொண்டு கடைக்கு ஒடிப்போய் அரிசி, பருப்பு, காய், போன்றவற்றை வாங்கிக் கொண்டு, நாங்கள் சமைத்துசாப்பிட, இரவு 9 மணி ஆயிற்று.

இந்த நிகழ்ச்சியை இங்கு நான் எதற்காக விவரித்துக் காட்டுகிறேன் என்றால், இன்று நான் முழுநேர புத்தக வியாபாரியாக இருப்பதற்கு அன்று ஏற்பட்ட பசிக்கொடுமையே காரணம்.

வியாபாரத்தை ஒரு கை பார்த்துவிடுவது என்ற வெறி அன்றுதான் ஏற்பட்டது. ஒரு ரூபாய்க்காக ஒரு நாள் முழுவதும் நான் காத்துக்கொண்டும், ஏங்கிக் கொண்டும் இருந்த அன்றைய அ.பெ )ெ நிலையை, நான் இன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். மறக்கக் கூடிய அனுபவமா இது!

தினம் தினம் சைக் கிள் ஷாப் பில் வருகிற பணம் வருவாயாக இருந்தது. எங்கள் வயிற்றுக்கு சாப்பாடாக ஆனது.

எங்கள் கூடவே சாப்பிட்டும், உறங்கியும் வந்த அந்த மனிதர், சரிபாதி பணத்தை வாங்கிக் கொண்டார். இன்னும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார் போலும்.

காலையில் உடற் பயிற்சிகள் செய்து வருவது என் வழக்கம். ஒரு நாள் உடற்பயிற்சி செய்கிறபோது என்னைப் பார்த்த அந்த மனிதர், நாம் ஜிம் ஒன்று ஆரம்பித்தால் என்ன என்றார்.

நீங்களும் செய்தது போல இருக்கும், வருகிறவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தால் வருமானமும் வருமே என்று கூறிய யோசனை, எனக்கு சரியாகப் பட்டது.

உடனே செயல்படத் தொடங்கினேன். அடுத்த மாத