பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி | 13

சம்பளத்தில், வெயிட் டிரெயினிங் செய்வதற் காக இரும்பு எடைத்தட்டுக்களை வாங்கி விட்டேன். என் வீட்டுக்கு முன்புறம் உள்ள ஒரு கிரவுண்ட் காலி இடத்தில், ராஜ்மோகன் உடலழகுப் பயிற்சிப் பள்ளி என்று பெயர் வைத்து, ஆரம்பித்து விட்டேன்.

ஒரு மாதம் வகுப்பு எடுக்க ஒருவருக்கு 3 ரூபாய் கட்டணம். மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பயிற்சிகள் நடக்கும். காலை 6 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி 6-7.30 - 8 - 9.30 வரை2 டியூஷன்கள் எடுத்துவிட்டு, பிறகு 4.30 முதல் இரவு 6.30 வரை டியூஷன் எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன். உடற்பயிற்சி வகுப்புக்கு வந்து விடுவேன்.

இரவு 9 மணிக்கு மேலே சாப்பிட்டுவிட்டு புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற வேகம் வரும். உடனே படிக்கப்போனால், இரவு 12 னி ஆகிவிடும். அதற்குப் பிறகு, எப்பொழுது எழுதுகிறேன், எப்பொழுது உறங்குகிறேன் என்று எனக்கே தெரியாது. உடல் களைத்துப் போகும் வரை, எனது படிப்பும் எழுத்தும் தொடரும்.

அடுத்த நாள் காலை 5 மணிக்கு எழுந்து, விடுவேன். இப்படியே ஒரு 6 மாதங்கள் கழிந்தன. ஒயா உழைப்புதான், உழைப்புக்கேற்ற வருமானம் வந்தது. ஆனால் போதவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் என்னை புத்தகம் எழுதவேண்டும் என்று ஒரு சக்தி தூண்டியது. அந்த சக்தியின் அதி வேகத்திற்கு நான் ஆளாகிக் கொண்டேன்.

காலை 6 மணிக்கு டியூஷன்கள். பிறகு பள்ளிக்கூடம். மாலை-டியூஷன்கள், நாடக ஒத்திகைகள், உடல் பயிற்சி கூடத்தில் வருகிறவர் களுக்குப் பயிற்சியளித்தல், என் வாழ்க் கைப் பயணம் நிறைய உழைப்புடன் நிறை யாத வருமானத்துடன் ஒடத் தொடங்கியது. -