பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 117

எங்கோ வெளியில் போய் வந்த நான், மாட்டுக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அவன் மாட்டோடு அல்லாடியபடி போனதைப் பார்த்து விட்டு, என்னப்பா! எங்கு மாட்டைக் கொண்டுபோகிறாய் என்றேன்.

என் மாட்டை நான் கொண்டு போகிறேன். அதற்கு உங்களிடம் பர்மிஷன் எதற்கு கேட்க வேண்டும் என்றான்.

அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.

இது என் மாடப்பா! உன் மாடு என்கிறாயே. எப்படி? என்று கோபமாகக் கேட்டேன் நான்.

நீங்கள் தானே உன் மாடு போல பார்த்துக் கொள்ளச் சொன்னிர்கள்! இதை என் மாடு போலத் தான் நானும் பார்த்துக்கொண்டேன். அப்பவும் என் மாடு தான் , இப்பவும் என் மாடு தான். என்று அடித்துப் பேசினான். சத்தமாகப் பேசினான். கூட்டம் சேர்ந்து விட்டது.

என் அண்டைவீடு, அடுத்த வீட்டுக்காரர்களி டம், இதை அவனது சொந்த மாடு என்றே சொல் லிக் கொண்டு வந்திருக்கிறானர். திட்டமிட்டு , இந்த விஷயம் எனக் குத் தெரியாதே! -

என் பேச்சு அந்தக் கூட்டத்தில் எடுபடவில்லை. ஏனென்றால், எல்லோரும் இது அவனுடைய மாடு என்று தான்சொன்னார்கள். நானும் தலை நிமிராமல் நின்றேன். பேச என்ன இருக்கிறது!

அவன் கையிலிருந்த மாட்டுக் கயிற்றை, இப்படிக்கொடு என்று வாங்கிக் கொண்டேன். எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டு மெளனமாக நின்றார்கள். வேடிக்கை பார்த்தார்கள். -

என்னை ஏமாளி என்று நினைத்தார்களோ,