பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

டாக்டர் எளில், நவராஜ் செல்லையா

ஏமாற்றுக்காரன் என்று நினைத்தார்களோ, நானறியேன்.

தம்பி என்று பால்காரனை அமைதியாக அழைத்தேன். ‘நீயாக என் மாட்டை ஒட்டிக் கொண்டு போனால், இது எனக்கு அவமானம். நானாக் இந்த மாட்டைக் கொடுத்தால், அதற்குப் பெயர் சன்மானம்.

மாட்டை ஒட்டிக்கொண்டு போ! ஆனால் மனதார உன்னை நம் பினேன், நம்பிக் கைத் துரோகம் செய்துவிட்டாய்... நீ விளங்க மாட்டாய் போ! என்று கயிற்றை அவன் கையில் கொடுத்து, அனுப்பினேன்.

அவன் ஒரு மாதிரியாக என்னைப்பார்த்து சிரித்த சிரிப்பு, இன்றும் என் மனதில் பசுமையாகத் தெரிகிறது.

என் வயிற் றெரிச்சல், ஏமாற்றம் தந்த சாபம், அவனை சும்மா விடவில்லை.

மாட்டோடு போன அவன் ஒருநாள், ரெயில்வே லெவல் கிராசிங்கில் மாட்டை ஒட்டிக் கொண்டு சென்றபோது, எலக்டிரிக் டிரெயின் வந்து விடவே, மாடு மிரண்டு துள்ள, அவன் மாட்டை விடாமல் பிடித்துக் கொண்டு தடுமாற, ரயில் பக்கத்தில் வந்து விட்டதே என்று பயந்து விழிக்க, அவன் வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டது.

இப்போதும் பார்க்கிறேன். அவன் சும்மா இருந்தாலும் வாய் சிரிப்பது போலவே இருக்கிறது. ஐயோ பாவம்!

படிக்காத பேரோடு ஞானப் பெண்ணே!

பாம்போடு பழகுதல் ஆகும் பெண்ணே!

அடிபட்டுத் துடித்தேனே ஞானப் பெண்ணே - அந்த

அனுபவம் போதுமே ஞானப் பெண்ணே!

என்று தான் பாடும் அளவுக்கு, எனக்கு அனுபவம் வந்து விட்டது, வாழ்வின் ஒரு பாதி கல்வி உலகத்தில் இருந்து விட்டு,