பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 125

பள்ளியில் மரியாதைக்குரிய மாஸ்டர், நாடகத்திலும் ஒரு நடிகர். புதிதாக எழுதிய நீங்களும் உடலழகு பெறலாம் என்ற புத்தகத்தின் அட்டைப் படத்தில் படம் போட்டு இவ்வளவு உதவிகளையும் செய்து, அந்த மனிதனை முன்னுக்குக் கொண்டு வர முயற்சித்த எனக்கு, கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

நம்பிக்கை துரோகம்.

நான் சைக்கிள் கடையில் கொஞ்ச நேரம் தான் இருப்பேன். மீதி நேரம் முழுவதும், அந்த மனிதனின் பொறுப்புதானே. அதனால் கடைக்கு வந்த வருமானத்தில் பாதி, கணக்கில் வராமல் போக ஆரம்பித்தது. துரோகம் நடக்காது என்று நான் நூறு சதவிகிதம் நம்பினேனே! அதற்குக் கிடைத்த அன்பளிப்பு.

வீதியிலே உறங்கியவனுக்கு காசும், மற்றவர்கள் தருகிற மரியாதையும், புத்தியில் தலைக் கனத்தை கொடுத்து விட்டது. தான் யார்? தன்னுடைய நிலை என்ன? தன்னுடைய தகுதி என்ன் 2 படிப்பு அறிவு என்ன? என்பதையெல்லாம் அவர் மறந்து விட்டார்.

‘எண்னைவிட எல்லா தகுதியும் பெற்றவர். எனக்கும் மேலே ‘ என்று அவர் எண்ணத் தொடங்கினார். அதனால், அவர் பேச்சும் போக்கும் வித்தியாசமாக மாறி விட்டன.

‘நீங்களும் உடலழகு பெறலாம் என்ற புத்தகத்தை நான் சொல் லச் சொல்ல, நவராஜ செல்லையா எழுதி விட்டார். அவருக்கு எழுதவே தெரியாது’ என்பதாக எல்லோரிடம் பேசத் தொடங்கினார்.

நான் இந்த உதவியை செய்ததால்தான், இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தில் , என் போட் டோவைப் போட்டார். பார்த் தீர்களா என்று. என் புத்தகத்தையும் காட்டத் தொடங்கினார்.


என்னைக் கானவரும் நண்பர்கள், ப சி செய்யும்