பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

சமாதானம் அடைந்தது.

அந்த வார்த்தை பலித்து விட்டதை இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். என் கடையில் உள்ள சைக்கிளை விற்று விட்டு, காணாமல் போயிற்று என்று கதை சொல்லி, காசு சேர்த்ததுபோல. அவரும் அந்த ஒரு ஆளை’ நம்பி கடையை விட்டு விட்டுப் போகும் போதெல்லாம் அதேபோல, காசை கணக்குக் காட்டாமலும், சைக்கிளை விற்று விட்டு சைக்கிள் கடையையே இல்லாமல் செய்துவிட்டார்.

நான் விட்டு விட்டு வந்த கடையின் சொந்தக்கார அம்மாள், கோர்ட் டிலே கேஸ் போட்டு, இருந்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் செலவு செய்ய வைத்து, ஒட்டாண்டியாக அந்த இடத்தை விட்டுக் காலி செய்து அனுப்பி வைத்தாள் என்று என்னிடம் அவரைப் பற்றிக் கூறினார்கள்.

ஒரு நம்பிக்கைத் துரோகக் கதை முடிந்தது என்ற நம்பிக்கையில், கடவுளுக்கு நன்றி சொல் லிவிட்டு, புத்தகங்களை எழுதியே தீரவேண்டும் என்ற வெறியுடன், எழுத ஆரம்பித்தேன். -

நீங்களும் உடலழகு பெறலாம் என்ற புத்தகம், 6 மாதங்களில் விற்றுத் தீர்ந்தது எனக்கு, என் மேலுள்ள நம்பிக்கையை மேலும் புதுப்பித்து, பலப்படுத்தி வைத்தது.

எந்த சிக்கலுக்கும் இனி இடங்கொடுக்காமல், எழுத்துப் பணியையே தொடர வேண்டும் என்று நான் முயற்சித்தாலும், சோதனைகள் என்பவை, இன்னும் என்னைத் தொடர்ந்து கொண்டேயிருந்தன. நான் கொஞ்சம் வசதியாக ஆக இருப்பதை அறிந்து, நாடகம் நடிக்கும் நண்பர்கள், என்னை வந்து மீண்டும் பிடித்துக் கொண்டனர். ஆக, பள்ளி வேலை, காலை மாலை டியூஷன், உடற் பயிற்சி வகுப்பு, இதற்கும் மேலாக நாடக ஒத்திகை என்று நாட்களை ஒட்டிக் கொண்டிருந்தேன்.