பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

17. நம்பிக்கை வீண்போகவில்லை

விளையாட்டுத் துறையில் நூல்கள் எழுத வேண்டும், எழுதியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் தான், என் எழுத்துப் பணியையே காரைக்குடியில் ஆரம்பித்தேன்.

300 பக்கம் உள்ள ஒரே புத்தகத்தை, எனது முதல் புத்தகத்தை, நான்கு முறை மாற்றி மாற்றி எழுதி எழுதி முடிக்க மூன்று ஆண்டு காலம் எடுத்துக் கொண்டேன். எப்படி புத்தகத்தை வெளியிடுவது என்ற எனது கவலைக்கு, கதவு திறத்து வைத்து, புத்தகத்தை அழகுற அச்சிட்டுத் தந்தனர். அழகு பதிப்பகத்தார். விளையாட்டுக்களின் வரலாறும் வழிமுறைகளும் என்பது தான் எனது முதல் புத்தகம்.

ஆறே மாதத்தில் 1000 காப்பிகள் விற்றுப் போனதால், ஆர்வத்தில் புயலாகிப் போன எனது ஆசைகள், அடுத்த புத்தகத்தை எழுதுகிற ஆவேசத்தைப் பெற்றன.

விளையாட்டுக்களின் வரலாற்றையும், விளையாடும் முறைகளையும் எழுதிய நீங்கள் விளையாட்டுக்களின் விதிகளை தமிழில் எழுதித் தரக் கூடாதா? என்ற விளையாட்டு அன்பர்கள் விடுத்த வேண்டுகோளும் என் வேலையை வேகப்படுத்தின.

புத்தகம் எழுதுவது என்பது எனக்கு எளிதாகப் பட்டதே தவிர, என் கவலை எல்லாம் எப்படி புத்தகமாக ஆக்குவது