பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

பெற்றபோது, மிகவும் கெளரவம் என்று மகிழ்தேன். அது நிறுத்தப்பட்டபோது, என் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை இங்கு நான் எழுதவில்லை. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். o

மூன்றாவது புத்தகமாக, நீங்களும் உடலழகு பெறலாம் என்ற புத்தகத்தை எழுதினேன். பதிப்பகம் பதிப்பகமாக அலைந்தேன். விளையாட்டுப் புத்தகத்தைப் போட்டால், யார் சார் வாங்குவாங்க போய் காதல் கதை, நாவல்னு எழுதிகிட்டு வாங்க என்று புத்திமதி கூறியாவர்களிடம் நிறைய வாங்கிக் கொண்டு வந்து, நானே புத்தகம் தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்தேன்.

மனைவியிடம் இருந்த நகைகள் மார்வாடி கடைக்குப் போக, புத்தகமாக எனது 3-வது நூல் வீட்டுக்கு வந்தது.

இந்த வேகத்தில்தான் 5 புத்தகங்களை ஒரே மூச்சில் எழுதிக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்ட என் மனைவி, ஏதோ பணம் கைவசம் இருப்பது போல, இப்படி கஷ்டப்பட்டு எழுதி, ஏன் நலிந்து போகின்றீர்கள் என்று ஒருவித எரிச்சலும், கோபமும், கிண்டலும், பச்சாதாபமும் கலக்கப் பேசும் பொழுதெல்லாம், கவலைப்படாதே, கடவுள் கொடுப்பார் என்று கூறிவிடுவேன்.

மிருகச்சாலையில் உள்ள மிருகத்தை வேடிக்கை

பார்ப்பதுபோல, என் மனைவி பார்த்துவிட்டுப் போய்விடுவாள்.

என் நம்பிக்கையில் அவளுக்கு நம்பிக்கை இல்லை. கடவுள் கொடுப்பார் என்றால் எப்படி கொடுப்பார் என்பதுதான் அவளின் வினா சந்தேகம்! .... குழப்பம் .... தடுமாற்றம் எல்லாம்.

எனது நம்பிக் கையோ, மலையளவு இருந்தது. தினம்