பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 133

தினம் அந்த நம்பிக்கை வளர்ந்ததே தவிர, தினையளவும் குறையவில்லை.

கடவுள் என்ன, நேரில் வந்து தரிசனமா தந்துவிடப் போகிறார்? மனிதர்கள் என்பவர்கள், கடவுளின் சாயல் என்று நம்புபவன் நான். தன்னையொத்த நல்ல மனிதர்களை என்னிடம் அனுப்பி, எனக்கு உதவுவார் என்பதுதான் என் நம்பிக்கை.

அப்படி யாராவது வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் நேரத்தையும் காலத்தையும் வீணாக்கவில்லை. நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன்தான் எழுதிக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் நான் வீட்டிற்கு மிகவும் களைத்துப் போய் வந்தபோது, என் மனைவி என்னை மிகவும் மகிழ்ச்சியுடன், முகமலர்ச்சியுடன் வரவேற்றாள்.

ஏதோ எதிர்பாராதவிதமான ஒரு நல்ல காரியம்

நடந்திருக்கிறது என்ற நினைவுடன் அமர்ந்தபோது, என்னிடம்

ந்து 5000 ரூபாய் கட்டு ஒன்றைத் தந்து, என் முகத்திலே ஏற்படுகிற மாற்றங்களை கூர்ந்து பார்த்தாள்.

புத்தகம் போடவேண்டும் என்றீர்களாம். உங்கள் மாணவர் ஒருவர் வந்து, இந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போனார். நீங்கள் வந்ததும் சொல்லுங்கள், அவசரமாகப் போக வேண்டும் என்று சொல்லி விட்டுப் போனார் என்றாள்.

இப்படி ஒரு திருப்பமா என் வாழ்வில்? என்று நெகிழ்ந்து போனேன். கடவுள் என்னைக் கைவிடவில்லை என்று சத்தம் போட்டுக் கூவினேன். ராமானுஜத்தின் முகம் என் நினைவுக்கு வந்தது. தொடர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருந்த உரையாடல்களும் என் நினைவுக்குள் ரீங்காரமாய் ஒலிர்ந்தன.