பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ் நவராஜ் செல்லையா

டெல்லியில் நடைபெற்ற அகில பாரத வித்யார்த்தி பரிஷத்

என்ற மாணவ அமைப்பின் அகில இந்திய மாநாட்டிற்கு, தமிழ் நாட்டின் சார்பாக, பத்து உறுப்பினர்களுடன் நானும் போய் கலந்து கொள்வதாக இருந்தேன். டெல்லி போகும் செய்தியை உடற் பயிற்சியின்போது, பலரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். மிகவும் அமைதியாக வந்து பயிற்சி செய்துவிட்டு அமைதியாகப் போகும் அந்த மாணவர் ராமானுஜமும் நான் பேசுவதைக் கேட்டுவிட்டு, என்னிடம் ஒரு நாள் வந்தார்.

நானும் உங்களுடன் டெல்லிக்கு வருகிறேன். அழைத்துப் போகிறீர்களா என்று கேட்டார். நானும் சரி என்றேன்.

ஒரு வாரம் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு, சென்னைக்குத் திரும்பியபோது ரயிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர், தனது குடும்பநிலை, அவரது ஆவல் போன்றவைகளையெல்லாம் விவரமாகச் சொன்னார். சொல்லிய பிறகு அவர் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது.

நீங்கள் இரவு பகலாக எழுதுகிறீர்கள், அலைகிறீர்கள், இருந்தாலும், உங்கள் பொருளாதார நிலைமை அவ்வளவு திருப்திகரமாக இல்லையே. ஏன்? என்று என்னிடம் கூறலாமா என்றார்.

நான் உழைக்கிறேன். இன்னும் கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன். உழைப்புக்கு உடல் பலம் மட்டும் போதாது. பண பலமும் பக்கபலமாக இருந்தால்தானே சாதிக்க முடியும். பணம் பற்றாக்குறை, பிறரிடம் போய் கடன் கேட்க மறுக்கும் என் தன்மானம், என்ன செய்வது? காலம் ஒரு நாள் மாறும். என் லட்சியம் யாவும் நிறைவேறும் என்று என் கவிதையை பாடிக் காட்டினேன்.

மிகவும் சீரியஸாகிவிட்டார்.அவர். ஏன் அவரிடம் இப்படி