பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 135

பேசினேன் என்றாகிவிட்டது எனக் கு. நீண்ட நேரம் கழித்துஅவர் பேசத் தொடங்கினார்.

எவ்வளவு பணம் இருந்தால், உங்களுக்கு உதவியாக இருக்கும் என்றார். தன் மனதிற்குள் பல கணக்குகளைப் போட்டபடி. -

5 புத்தகங்களை எழுதி முடித்திருக்கிறேன். அந்த புத்தகங்களைப் பதிப்பிக்க, குறைந்தது 5000 ரூபாயாவது தேவைப்படும் என்றேன்.

அந்த புத்தகங்களின் பெயர்களைக் கூறமுடியுமா என்றார்.

1. நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.

2. விளையாட்டுக்களின் கதைகள்.

3. விளையாட்டு விழா நடத்துவது எப்படி?

4. எதற்காக உடற்பயிற்சி செய்கிறோம்?

5. பெண்களும் பேரழகு பெறலாம்.

ஆகா! நல்ல அருயைான தலைப்புகள். மக்களுக்கு பயன்படக் கூடிய மணியான நூல்கள் என்று ராமானுஜம் பாராட்டினார்.

அத்துடன் அந்தப் பேச்சு முடிந்துவிட்டது. பணத்தைப் பற்றியோ, புத்தகத்தைப் பற்றியோ அவர் பேசவும் இல்லை. நான் தொடரவும் இல்லை.

எத்தனையோ பேர்களிடம் புத்தகம் பற்றி பேசியிருக்கிறேன். கேட்டவர்கள் எல்லாம், தந்து விடவா போகிறார்கள். மற்றவர்களைப் போலத்தான் நான்

ராமானுஜத்தையும் நினைத்தேன்.

டெல் லிக்குப் போய் திரும்பி வந்து இன்று இரண்டு வாரங்கள் ஆயின. நானும் அந்தப் பேச்சுக்களை மறந்து